மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதி | டி.வி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் வேண்டும் : மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு | கொலை செய்பவர்கள் ஹீரோக்களா?: கேரள முதல்வர் கடும் தாக்கு | பிளாஷ்பேக் : அந்த காலத்து அடல்ட் கண்டன்ட் படம் | பிளாஷ்பேக்: முதல் திருவிளையாடல் படம் | சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் | ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் : காங்கிரஸ் எம்எல்ஏ கொந்தளிப்பு | அல்லு அர்ஜுன் - அட்லீ படம் விரைவில் ஆரம்பம்? | அவசியம் வந்தால் நானே சொல்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ் | தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் டேவிட் வார்னர் |
தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்தில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்தவர் நடிகை இயக்குனர் மேக்னா ராஜ். பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் காலமானார். இது கன்னட திரை உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மேக்னா ராஜ், ராயன் என்கிற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது குழந்தைக்கு நான்கு வயதான நிலையில் சிறுவனை தனது பெற்றோரின் பராமரிப்பில் பாதுகாப்பாக விட்டுவிட்டு மீண்டும் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். தனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்த மலையாளத் திரையுலகிற்கே எட்டு வருடம் கழித்து திரும்பி உள்ள மேக்னா ராஜ் தற்போது சுரேஷ் கோபி நடித்து வரும் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். மீண்டும் மலையாள படத்தில் நடிப்பதற்காக செட்டிற்குள் நுழைந்தபோது அங்கிருந்தவர்கள் தனக்கு அளித்த வரவேற்பை பார்த்ததும் மீண்டும் தாய்வீடு திரும்பியது போன்று உணர்வு ஏற்பட்டதாக கூறியுள்ளார் மேகனா ராஜ்.