துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
பிரபாஸ் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 ஏடி' என்ற படத்தில் மரியம் என்ற வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றவர் நடிகை ஷோபனா. இந்நிலையில் தற்போது அவர் ஹிந்தியில் தயாராகி வரும் 'ராமாயணா' படத்திலும் இணைந்திருக்கிறார். நித்தேஷ் திவாரி இயக்கி வரும் இந்த படத்தில் ரன்வீர் கபூர் ராமர் வேடத்திலும், சாய் பல்லவி சீதை வேடத்திலும் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ராவணன் வேடத்தில் நடிக்கும் யஷின் தாயாக கைகேசி என்ற வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷோபனா. இப்படத்தில் அவரது தோற்றம் அச்சுறுத்தும் வகையில் மிரட்டலாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ராமாயணா 2026ம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.