ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து 2000மாவது ஆண்டு வரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தவர் சொக்கலிங்க பாகவதர். இன்று அவரது 23வது நினைவு நாள். இதை முன்னிட்டு அவரைப் பற்றிய சில நினைவுகள்.
உள்ளூரில் பாடகராக இருந்தவரை அடையாளம் கண்டு நாடகத்திற்கு கொண்டு வந்தவர் அப்போது காமெடி நடிகராக இருந்த காளி என்.ரத்னம். மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்து முதன் முதலாக 'சத்யவான் சாவித்ரி' நாடகத்தில் நடித்தார். 'காக்க வேணும் ராமா' என்ற பாடலை அந்த நாடகத்திற்காக பாடினார். தொடர்ந்து அந்த கம்பெனியிலேயே மாதம் 5 ரூபாய் சம்பளத்திற்கு நடித்தார். அதன்பிறகு பல கம்பெனிகளில் பாடி நடித்தார். எம்ஜிஆர், சிவாஜி, தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோருடன் நடித்தார்.
'சம்பூர்ண மகாபாரதம்' படத்தில் கிருஷ்ணராக நடித்து சினிமா நடிகர் ஆனார். 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள பாகவதர் தனது 80வது வயதில் பாலுமகேந்திரா இயக்கிய 'சந்தியா ராகம்' படத்தில் கதை நாயகனாக நடித்தார். 'வீடு' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். சந்தியாராகம் படத்தில் நடித்தற்காக தேசிய விருது பெற்றார்.
1934ம் ஆண்டு சென்னையில் மியூசிக்கல் புராடக்ஸ் லிமிடெட் என்ற கம்பெனி 10 அங்குல விட்டமுடைய இசைத்தட்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் தனது முதல் வெளியீடாக ஏழு இசைத்தட்டுகள் கொண்ட 'சீதா கல்யாணம்' என்ற தொகுதியை வெளியிட்டது. 7 இசைத்தட்டுகளும் ஒரு உலோகப் பேழையில் வைத்து 11 ரூபா 4 அணாவுக்கு விற்பனை செய்தது. இந்த இசை தட்டிற்கு பாடியது சொக்கலிங்கம். ஆனால் இசை தட்டு நிறுவனம் சொக்கலிங்க பாகவதர் என்ற பெயரில் இதனை வெளியிட்டது. அன்று முதல் பாகவதர் ஆனார் சொக்கலிங்கம்.
தனது கடைசி காலத்தில் வாழ குடிசை இன்றி தவித்த பாகவதருக்கு தமிழக அரசு வீடும், பென்சனும் கொடுத்தது. 2002ம் ஆண்டு இதே நாளில் மரணம் அடைந்தார்.