துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
80களில் வெளிவந்த பெரும்பாலான ஆக்ஷன் திரில்லர் படங்கள், ஹாலிவுட் படங்கள், பாலிவுட் படங்களின் தாக்கத்தில் அமைந்தது. சில படங்கள் நேரடியாக உரிமம் பெற்று தயாரானது. சில படங்கள் இன்ஸ்பிரேசன் என கூறிக்கொண்டு வெளியானது.
1974ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படம் 'டெத் விஷ்'. மைக்கேல் வின்னர் இயக்கிய இந்த படம் ஆக்ஷன் திரில்லர் ஜார்னர் படங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது. ஒருவன் வில்லன்களால் தன் குடும்பத்தை இழப்பான். அதற்கு காரணமான வில்லன்களை மட்டுமல்லாது அதுபோன்ற எல்லா வில்லன்களையும் தேடி தேடி கொல்பவன். இரவில் கொலை பணிகளை செய்து விட்டு பகலில் மதிப்பு மிக்க ஒரு வேலையில் இருப்பான். இதனால் யாருக்கும் சந்தேகம் வராது. என்பதுதான் இந்த படத்தின் கதை சுருக்கம்.
இந்த கதையை தழுவி உலகெங்கும் பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. தமிழில் வெளிவந்த முதல் படம் 'குரோதம்'. துபாயில் வசித்து வந்த தொழில் அதிபர் பிரேம் என்பவர் இந்த கதையை தமிழில் எடுப்பதற்காக வந்தார். அவரே நடித்தார். ஏ.ஜெகன்னாதன் இயக்கினார். ராணி பத்மினி, அசோகன், அஞ்சலி, தங்கவேலு, ஜெயமாலினி உள்ளிட்ட பலர் நடித்தனர். படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோ ஆனார் பிரேம். ஆனால் அதன்பிறகு அவ்வவ்போது சில படங்களில் நடித்தார், இயக்கினார். ஆனால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
இதே கதையில் உருவான இன்னொரு படம் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'நான் சிவப்பு மனிதன்'. இதில் ரஜினி நாயகனாக நடித்தார். கே.பாக்யராஜ் துப்பறிவாளராக நடித்தார். அம்பிகா, சத்யராஜ், செந்தில், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்தனர்.