ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் | பிளாஷ்பேக் : கணவர் இயக்கிய அத்தனை படங்களையும் தயாரித்த கண்ணாம்பா |
ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள அடுத்த படம் ' நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' . இதில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்தியூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களாக இந்த படத்தை தனுஷின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த எஸ்.ஜே. சூர்யா இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தனுஷ் உடன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்தேன். ஜாலியாக இருந்தாலும் எமோசனல் மற்றும்தனித்துவமான படமாக இருந்தது. தனுஷுக்கு ஒரு கேள்வி ராயன் படத்திற்கு பிறகு பிஸியாக இருந்தபோதும் எப்படி உடனே ஒரு ஜாலியான படத்தை எடுத்தீர்கள்? படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்" என இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்ட பதிவில், ‛‛நேரம் ஒதுக்கி எங்கள் படத்தைப் பார்த்ததற்கு நன்றி சார். படம் உங்களுக்கு பிடித்தது மகிழ்ச்சி. உங்கள் விமர்சனத்தால் எங்களது குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்'' என குறிப்பிட்டுள்ளார்.