விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ‛மதகஜராஜா'. 2013ல் வெளியாவதாக இருந்த நிலையில் சில பிரச்னைகள் காரணமாக நீண்ட காலமாக முடங்கி கிடந்தன. 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியானாலும், இன்னும் ரசிகர்கள் அதே எதிர்பார்ப்புடன் வெளியீட்டிற்கு காத்திருந்தனர். அதேபோல், படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கும் பத்திரிகை, மீடியா, சோஷியல் மீடியா உள்ளிட்ட ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சுந்தர் சி, விஷால், அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் நடிகை அஞ்சலி பேசும்போது, ‛‛ஒரு நல்ல படம் 12 ஆண்டுகள் கழித்து வந்தாலும் கூட மக்கள் அதை வரவேற்பார்கள் என்பதை மதகஜராஜா படத்தின் வெற்றி உணர்த்தி இருக்கிறது. பல தியேட்டர்களில் நானும் நேரில் சென்று அதை கண்கூடாக பார்த்தேன். இயக்குநர் சுந்தர்.சி.,யை நான் 12 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பார்க்கிறேன். மதகஜராஜா எப்போது வந்தாலும் ஓடும் என்று நான் மட்டுமல்ல.. எங்கள் டீமில் இருக்கும் அனைவருமே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அது நாங்கள் படத்தின் மீது வைத்த நம்பிக்கை.
கலகலப்பு படத்தை தொடர்ந்து மீண்டும் உடனே சுந்தர்.சியுடன் இணைந்து பண்ணிய படம் இந்த மதகஜராஜா. கலகலப்பு படத்தைப் போலவே மதகஜராஜா படத்தையும் ஒரு ரசிகையாக நான் என்ஜாய் பண்ணினேன். ஆனால் இந்த இரண்டு படங்களிலும் என்னுடைய பெயர் மாதவி தான். அடுத்த படத்திலாவது எனக்கு வேறு பெயர் வையுங்கள் சார்.
டியர் லவ்வரு பாடல் மதகஜராஜா படத்தின் மைய ஈர்ப்பாக அமைந்து விட்டது. அங்காடித்தெரு படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் ரிச்சர்டுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். இப்போது கூட ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறோம். நாங்கள் அடிக்கடி பேசும்போது மதகஜராஜா பற்றி தான் பேசுவோம். விஜய் ஆண்டனியின் பாடல்களுக்கு நான் ரசிகை. இந்த படத்தில் டியர் லவ்வரு, சிக்குபுக்கு என இரண்டு பாடல்களுமே என்னுடைய பேவரைட்” என்றார்.