குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
‛ராயல் ஸ்டாக் பூம்பாக்ஸ்' பெயரில் மும்பையில் இசை திருவிழா நடப்பது வழக்கம். மூன்றாம் ஆண்டு விழா அறிமுக நிகழ்வில் பாலிவுட் இசை துறையை சேர்ந்த அர்மான் மாலிக், அமித் திரிவேதி, நீத்தி மோகன், நிகிதா காந்தி, வேகம், இக்கா மற்றும் டி.ஜே.யோகி போன்ற பிரபலங்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர், பாடகர் அமித் திரிவேதி, “என்னைப் பொறுத்தவரை, கதைகளை ட்யூன்கள் மூலம் பகிர்ந்து கொள்வதற்கும் மக்களுடன் ஆழமாக இணைக்கவும் இது ஒரு வாய்ப்பாகும். இதில் நானும் ஒரு பகுதியாக பங்கேற்றது மகிழ்ச்சி'' என்றார்.
பாடகர் அர்மான் மாலிக் கூறுகையில், "இசை எப்போதுமே மக்களுடன் சேர ஒரு வழியாகும். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எந்த மொழி பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு நகரத்திலும் மக்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மக்களைச் சந்திக்கவும், வெவ்வேறு கலாச்சாரங்களை அனுபவிக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இசை எல்லோரையும் எப்படி ஒன்றிணைக்கிறது என்பதை உணர முடிகிறது'' என்றார்.
பாடகி நீத்தி மோகன் பேசுகையில், "உலகின் மொழியாக எப்போது இசை இருக்கிறது. இது மக்களை ஒன்றாக இணைக்கிறது. இந்த தளம் கலைஞர்களுக்கு ஒரு அருமையான இடமாகும். இங்கு ரசிகர்களுடன் இசை கலைஞர்கள் இன்னும் ஆழமாக இணைத்து கொள்ள முடியும். பல்வேறு இசை டியூன்களுடன் பயணித்தது மறக்க முடியாத தருணமாக உள்ளது'' என்றார்.