இந்தாண்டு (2024) முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. 2024ல் தமிழ் சினிமாவில் பல சந்தோஷமான நினைவுகள் இருந்தாலும் சில துக்கமான விஷயங்களும் நடந்து இருக்கிறது. அந்த வகையில் பலருக்கும் பரிச்சயம் ஆன ஒரு சில கலைஞர்களின் மரணம் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
இந்த வருடத்தில் பாடகி பவதாரிணி, நடிகர் டெல்லி கணேஷ், நடிகர் டேனியல் பாலாஜி, தயாரிப்பாளர், நடிகர் மோகன் நடராஜன், இயக்குனர் ‛பசி' துரை, இயக்குனர் சுரேஷ் சங்கையா, இயக்குனர் குடிசை ஜெயபாரதி, நடிகை சிஐடி சகுந்தலா, தயாரிப்பாளர் டில்லி பாபு, பாடகி உமா ரமணன், காமெடி நடிகர் சேஷூ, இசையமைப்பாளர் விஜய் ஆனந்த், ஸ்டன்ட் மாஸ்டர் கோதண்டராமன், நடிகர் பிஜிலி ரமேஷ், நடிகர் பிரதீப் விஜயன், நடிகர் செவ்வாழை ராசு, நடிகர் விஸ்வேஸ்வர ராவ், நடிகர் அடடே மனோகர், சின்னத்திரை நடிகர் நேத்ரன் ஆகியோர் காலமானார்கள்.
ஒட்டுமொத்தத்தில் சினிமா ரசிகர்களுக்கு துக்கமான ஆண்டாகவும் இது பார்க்கப்படுகிறது.