துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், ஜெயராம், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இந்த படம் வருகிற ஜனவரி 10ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது இயக்குனர் ஷங்கர் பேசும்போது, ''30 ஆண்டுகளாக திரை வாழ்க்கையில் தெலுங்கு ரசிகர்கள் எனக்கு அளித்து வரும் அன்பிற்கு மிக்க நன்றி. இந்த படத்தை என்னுடைய பாணியில் தனித்துவமான ஒரு கதையில் இயக்கி இருக்கிறேன். தெலுங்கு சினிமாவின் மூன்று ஹீரோக்களுடன் பணிபுரியலாம் என்று நான் நினைத்திருந்தேன். அதில், ராம்சரணுடன் முதன்முதலாக எனக்கு தெலுங்கில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
இந்த படத்தில் ராம்சரண் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அதில் அப்பண்ணாவாக அவர் நடித்திருக்கும் கெட்டப் இந்த படத்துக்கு மிகப்பெரிய சிறப்பம்சமாக அமைந்திருக்கிறது. இந்த கேம் சேஞ்சர் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகப்பெரிய அளவில் கவரும்'' என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.