ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! |
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் அவரது 51வது படமாக 'குபேரா' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இப்படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் படக்குழு உள்ள நிலையில் தற்போது குபேரா படத்தின் கதைக்களம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, "பணத்தைப் பின் தொடர்வதும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் சுற்றியே கதை நகர்கிறதாம். ஒரு பிச்சைக்காரர் ஒரு வியக்கத்தக்க மாற்றத்தை சந்திக்கிறார். கதாபாத்திரங்களால் எதிர்கொள்ளப்படும் பேராசை, லட்சியம் மற்றும் தார்மிக சங்கடங்கள் ஆகியவை மூலம் மீட்புக்கான தேடலுக்கு வழிவகுக்கிறது” என செய்தி வெளியாகியுள்ளது.