புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் காந்தாரா. கன்னடத்தில் மட்டுமல்ல தென்னிந்திய அளவில் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் படத்தையும் இயக்கியிருந்தார் நடிகர் ரிஷப் ஷெட்டி. சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதையும் பெற்றார். இந்த படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில் அடுத்ததாக காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை காந்தாரா சாப்டர் 1 என்கிற பெயரில் உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது என்பதையும் முன்கூட்டியே தேதியுடன் அறிவித்தும் விட்டார்.
பெரும்பாலும் ரிஷப் ஷெட்டிக்கு தனது சொந்த ஊரான உடுப்பி தாலுகாவில் உள்ள கெரடி கிராமத்தில் தன்னுடைய படங்களின் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என ரொம்பவே விருப்பம் இருந்தது. பலமுறை லொகேஷன்கள் பார்த்தாலும் அது கைகூடாமல் போனது. அதே சமயம் காந்தாரா படத்தில் தனது சொந்த ஊரில் உள்ள வனப்பகுதியிலேயே பெரும்பாலான படப்பிடிப்பை நடத்தி தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார் ரிஷப் ஷெட்டி. இந்த இரண்டாம் பாகமும் பெரும்பாலும் அதே பகுதியில் தான் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ராணா நடத்தும் டாக் ஷோவில் பங்கேற்ற ரிஷப் ஷெட்டி கூறும்போது, “எனது சொந்த ஊரை ஒரு சினிமா நகரமாக மாற்ற விரும்புகிறேன். அதற்கு கெரடி பிலிம் சிட்டி (கே எப் சி) என்றும் மனதிற்குள் பெயர் வைத்திருக்கிறேன். இந்தப் பகுதியில் பெரிய அளவில் படங்கள் உருவானதில்லை. ஆனால் காந்தாரா இந்த பகுதியை பிரபலப்படுத்தி விட்டது” என்று கூறியுள்ளார்.