Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி பெரிய நடிகர் என்பதே தெரியாது: சொல்கிறார் நயன்தாரா

20 டிச, 2024 - 06:10 IST
எழுத்தின் அளவு:
I-didnt-know-Rajinikanth-was-a-great-actor-Nayanthara-says


ரஜினிகாந்த் உடன் 'சந்திரமுகி' படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. இப்படம் 800 நாட்களுக்கு மேலாக ஓடி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பி.வாசு இயக்கியிருந்த இப்படத்தில், பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதன்பின்னர், 'குசேலன்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். தொடர்ந்து 'தர்பார், அண்ணாத்த' படங்களிலும் ரஜினி - நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர்.


இந்த நிலையில் தனியார் ஊடகத்திற்கு நயன்தாரா அளித்த பேட்டியில், சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது: சந்திரமுகி படத்தில் எனக்கு முதல் காட்சி ரஜினி சாருடன் தான் இருந்தது. அப்போது அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பது எனக்கு தெரியாது. அதுதான் எனக்கு மிகவும் உதவியது என்று நினைக்கிறேன். ஒருவேளை எனக்கு முன்பே தெரிந்திருந்தால் பயம் வந்திருக்கும். அவர்களின் பிரபலம் குறித்தும், நட்சத்திரம் என்பது குறித்தும் அறியாமல் இருப்பது எனக்கு உதவியது. இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

நயன்தாராவின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகள் வரை ரஜினிகாந்தின் புகழ் பரவியிருந்தும், அவர் உச்ச நடிகர் என்பது கூட தெரியாது என்பது போல நயன்தாரா பேசியிருப்பதற்கு சமூக வலைதளத்தில் நயன்தாராவை ரஜினி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 'கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்க' என கிண்டல் அடித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
வெங்கட் பிரபுவா... சிவாவா... - யாரை டிக் செய்ய போகிறார் அஜித்வெங்கட் பிரபுவா... சிவாவா... - யாரை டிக் ... ராஷ்மிகா பார்த்து வியந்த விஜய் - த்ரிஷா ராஷ்மிகா பார்த்து வியந்த விஜய் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

22 டிச, 2024 - 09:12 Report Abuse
அசோக், சென்னை அந்த புளுகு. சுத்தமான உருட்டு... கடந்த 30-40 வருசத்துல தலைவர தெரியாம இந்தியால யாருமே கிடையாது..
Rate this:
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
21 டிச, 2024 - 07:12 Report Abuse
Natchimuthu Chithiraisamy மக்கள் காலத்தை விரையம் ஆக்கிக்கொண்டிரு இல்லை என்றால் அவன் நாலு காசு சம்பாதித்து விடுவான். நம்ம வாய்ப்பு மக்களுக்கு கிடைக்காது. பணம் செலவு பண்ணத்தான் மக்களுக்கு தெரியும்
Rate this:
karthi -  ( Posted via: Dinamalar Android App )
21 டிச, 2024 - 06:12 Report Abuse
karthi 9thara lam oru aalu... publicity paithiyam
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
21 டிச, 2024 - 10:12 Report Abuse
angbu ganesh இன்னொரு அறிக்கை வரும் நான் சொன்னதை தவறாக புரிந்து கொள்ள பத்தாதுன்னு .
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
21 டிச, 2024 - 09:12 Report Abuse
angbu ganesh காசுக்கு நடிக்கறவத்தானே என்ன வேணா பேசுவ விட்டா பணம் கொடுத்தா விக்னேசையே யாருன்னு தெரியாதுன்னுவ 24 போதை
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)