கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? |
இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக அறிவித்தனர். இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கின்றார். இப்படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்திற்கு 'இளையராஜா' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்தனர்.
கடந்த சில வாரங்களாக இப்படம் கைவிடப்பட்டதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் நெருங்கிய வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவலின் படி, இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்டு வரும் தாமதத்தால் இதன் படப்பிடிப்பை 2025ம் ஆண்டு, ஜூன் மாதத்திற்கு பிறகு துவங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றன.