தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் |

தெலுங்குத் திரையுலகத்தில் மற்றுமொரு 1000 கோடி சினிமா என்ற பெருமையை 'புஷ்பா 2' படம் பெற்றுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் வெளியான ஆறே நாட்களில் 1000 கோடி சாதனையை நிகழ்த்தியது. இந்திய சினிமாவில் இதுவரை எந்தப் படமும் நிகழ்த்திராத சாதனை இது.
தெலுங்குத் திரையுலகத்தில் முதன் முதலில் 'பாகுபலி 2' படம் மூலம் 1000 கோடி சாதனையைக் கொண்டு வந்தவர் இயக்குனர் ராஜமவுலி. அதன் பிறகு அவரே 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் இரண்டாவது 1000 கோடியையும் கொண்டு வந்தார். நாக் அஷ்வின் இயக்கத்தில் இந்த ஆண்டில் வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படம் மூன்றாவது 1000 கோடி படமாக அமைந்தது.
மிக விரைவில் 1000 கோடி வசூல், மிக விரைவில் ஹிந்தியில் 400 கோடி வசூல் என 'புஷ்பா 2' படம் சாதனை புரிந்ததை இந்திய அளவில் உள்ள வினியோகஸ்தர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். ராஜமவுலியை விடவும் சுகுமாரைப் பாராட்டி வருகிறார்கள். ராஜமவுலி இயக்கிய இரண்டு படங்களுமே சரித்திரம் மற்றும் சுதந்திர காலப் படங்களாக அமைந்தன. ஆனால், 'புஷ்பா 2' படம் பக்கா கமர்ஷியல் படமாக இருந்தது.
இதன் காரணமாக அடுத்து ராஜமவுலி - மகேஷ்பாபு இணைய உள்ள படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் உள்ளது.




