துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவரது சொந்த தயாரிப்பு என்பதால் அவருக்கு நல்ல பெயருடன் ஓரளவு நல்ல லாபமும் கிடைத்தது. இந்த நிலையில் அவரது நடிப்பில் இயக்குனர் என்.ராஜசேகர் இயக்கத்தில் 'மிஸ் யூ' என்கிற திரைப்படம் தயாராகியுள்ளது. கடந்த நவம்பர் 27ம் தேதியே வெளியாக வேண்டிய இந்த படம் மழையை காரணமாக வைத்து ரிலீஸ் தேதி தள்ளி போய் தற்போது டிசம்பர் 13ம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால் உண்மையான காரணம் மழை அல்ல..
டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியானதால் ஒரு வாரம் முன்பு வெளியாகும் சித்தார்த்தின் 'மிஸ் யூ' படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் இந்த ரிலீஸ் தேதி மாற்றம் என திரையுலகிலேயே பேசப்படுகிறது. அதே சமயம் மிஸ் யூ திரைப்படத்தை பற்றி வெகு உயர்வாக இதுவரை இப்படி ஒரு காதல் படம் வந்ததே இல்லை என்பது போன்றும் இதுதான் தரமான படம் என்பது போன்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில், புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பேசி வருகிறார் சித்தார்த். அவரது படம் குறித்து அவர் உயர்வாக பேசுவதில் தவறில்லை. ஆனால் மற்ற பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் தனது படத்தின் ரிலீஸை பாதிப்பதால் அந்த படங்கள் குறித்தும் தொடர்ந்து காட்டமாக பேசி வருகிறார் சித்தார்த்.
குறிப்பாக புஷ்பா 2 படத்தின் மீதான அவருடைய விமர்சனம் தொடர்ந்து அவரிடம் இருந்து வெளிப்படுகிறது அப்படி சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சித்தார்த். அப்போது, பாட்னாவில் புஷ்பா 2 திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்த போது அதற்கு கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இந்த கேள்வியால் கடுப்பான சித்தார்த் கூட்டம் எங்கே தான் வராது.. ஒரு ஜேசிபி கொண்டு வந்து பள்ளம் தோண்டினால் கூட அதை பார்ப்பதற்கு ஆயிரம் பேர் வருவார்கள்.. ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்கள் அதற்காக காசு கொடுத்து கூட்டம் கூட்ட மாட்டார்களா என்ன ? எங்கள் ஊரில் இதைத்தான் 200 ரூபாய், குவார்ட்டர், கோழி பிரியாணி என்போம் என்று கிண்டலாக கூறியுள்ளார்.
பாட்னாவில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூடிய கூட்டம் தான் சித்தார்த்தை இப்படி பேச வைத்துள்ளது. அது மட்டுமல்ல திரையுலகை பொருத்தவரை அல்லு அர்ஜுனுக்கு முன்பாகவே சித்தார்த் ஒரு நடிகராக உள்ளே நுழைந்தவர் தான். ஆனால் தனக்கு பின் வந்த அல்லு அர்ஜுன் தன்னைவிட பல மடங்கு உயரத்திற்கு சென்று விட்டதை சித்தார்த்தால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பதால்தான் இதுபோன்று அவரிடம் விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன என்றும் திரையுலகைச் சேர்ந்த சிலரே பேசி கொள்கிறார்கள்.