கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' |
3, வை ராஜா வை, லால் சலாம் போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. சமீபகாலமாக ஆன்மீகத்தில் தீவிரமாக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினி பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று தரிசனம் சென்று வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திமுக எம்பி கனிமொழிக்கும் தனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் , கனிமொழி அக்காவுக்கும் எனக்குமிடையே உள்ள உறவு மிகவும் அழகானது. எங்களுடைய நட்பு எங்கு தொடங்கியது எப்போது பழகினோம் என்பது தெரியாது. ஆனால் 20 ஆண்டுகளாக எங்களுக்கு இடையே நல்ல நட்பு உள்ளது. நான் எப்போது மன குழப்பத்தில் இருந்தாலும் உடனே அவருக்கு கால் பண்ணி தான் பேசுவேன். அதுமட்டுமில்லாமல் எங்கேயாவது முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் அவருடன் மட்டும் தான் சொல்லுவேன். அவர் எப்படி பிறந்ததிலிருந்தே அரசியலில் இருக்கிறாரோ அதேபோன்று நான் பிறந்ததிலிருந்தே சினிமாவில் இருக்கிறேன்.
அவருக்கு அரசியல் தவிர எதுவும் தெரியாது. அதே போல் எனக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது என்று கூறியுள்ள ஐஸ்வர்யா ரஜினி, கனிமொழி அக்காவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனபோதிலும் நான் எந்த ஊர் கோவில்களுக்கு சென்றாலும் அவரை சார்ந்தவர்கள் தான் என்னை பாதுகாப்பாக அழைத்து செல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.