ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

தற்போது அஜித் குமார் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் மூன்று வேடங்களில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் எதிர்காலத்தில் அஜித்தும் அரசியலுக்கு வருவாரா என்பது போன்ற கேள்விகள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அது குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா தான் அளித்த ஒரு பேட்டியில் கூறும்போது, ''விஜய்யை பொருத்தவரை படப்பிடிப்பு தளங்களில் அமைதியாகவே இருப்பார். இதுவரை அவர் அரசியல் பேசி நான் பார்த்ததே இல்லை. ஆனாலும் இன்றைக்கு விஜய் அரசியல் கட்சி தொடங்கி முழு நேர அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இப்படி விஜய்யை போன்றுதான் அஜித்குமாரும் படப்பிடிப்பு தளங்களில் அரசியல் குறித்து பேசியதில்லை. யாராவது அரசியல் குறித்து பேச தொடங்கினால் கூட தான் அமைதியாகி விடுவார். அதோடு அவருக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் துளி கூட கிடையாது. அதனால் விஜய்யை போன்று அஜித்தும் அரசியலுக்கு வருவார் என்று யாரும் நினைக்க வேண்டாம். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை,'' என்று நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார்.