அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
2024ம் ஆண்டில் எந்தப் படம் ஓடும், எந்தப் படம் ஓடாது என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில முன்னணி நடிகர்களின் படங்கள் வியாபார ரீதியில் நஷ்டமடைந்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த வருடம் ஒரு படம் கூட 500 கோடி வசூலைத் தாண்டவில்லை என்பது மற்றுமொரு அதிர்ச்சி.
நேரடிப் படங்களுக்கே இந்த நிலை என்றால் டப்பிங் படங்களைப் பற்றிச் சொல்ல வேண்டாம். இருந்தாலும் சில டப்பிங் படங்கள் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்துள்ளன.
அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் தமிழகத்திலும் வெளியாக உள்ளது. 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை வெளியிட உள்ளார்கள். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் டிஸ்ட்டிரிபியூஷன் முறையில் படத்தை இங்கு வெளியிடுகிறது.
தற்போது அதே பாணியில்தான் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' படத்தையும் வெளியிட உள்ளார்களாம். இதன் மூலம் படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் அதன் 'ரிஸ்க்' தயாரிப்பாளரை மட்டுமே சாரும். பொங்கலுக்கு தமிழ்ப் படங்களும் வெளியாகும் என்பதால் இப்போதே வியாபாரத்தை பேசி முடித்துவிட்டார்களாம்.