ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்தில் வெறும் ஐந்தே படங்களில் இயக்குனர் ஷங்கருக்கு அடுத்த இடத்தில் பேசப்படும்படியான மிகப்பெரிய வளர்ச்சியை தொட்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய், கமல் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி என்கிற படத்தை இயக்கி வருகிறார். வழக்கம்போல இந்த படத்திலும் ரஜினியுடன் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே நடிக்க வைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
அதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர் என்றால் நடிகர் நாகார்ஜூனா தான். தமிழில் ரட்சகன், பயணம், தோழா என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவரது ஆரம்பகால படங்களான உதயம், இதயத்தை திருடாதே படங்கள் எல்லாமே தமிழ் ரசிகர்களின் இதயத்தை திருடியவை தான். அந்த வகையில் தோழா படத்திற்கு பிறகு முற்றிலும் புதிய ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறார் நாகர்ஜுனா.
இந்த படத்தில் லோகேஷ் கனகராஜூடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்ட நாகார்ஜுனா கூறும்போது, “லோகேஷ் கனகராஜ் உடன் வேலை பார்ப்பதில் நான் ரொம்பவே உற்சாகமடைகிறேன். அவர் திரைக்கதை உள்ளிட்ட மற்ற அனைத்திலுமே தான் அடுத்த தலைமுறை இயக்குனர் என்பதை நிரூபித்து வருகிறார். அவரது கதாபாத்திரங்களை நடிப்பது ரொம்பவே புதுமையாக இருக்கிறது. அதற்கான சுதந்திரத்தையும் அவர் கொடுக்கிறார். அங்கே எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை. ஒரு ஹீரோவிடமும் சரி, வில்லன்களிடமும் சரி நீங்கள் இப்படித்தான் நடிக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என ஒரு போதும் அவர் சொல்வதில்லை" என்று கூறியுள்ளார்.