தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” | மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் அஞ்சலி! | மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கும் ரெஜினா கசாண்ட்ரா! | இயக்குனர் செல்வராகவனை பிரிகிறாரா கீதாஞ்சலி? | அந்தோணி பாட்டு... கிராமத்து மெட்டு | ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். இதில் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக கூறப்பட்டது. அவரது இசையிலான பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில், திடீரென அப்படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் விலகியுள்ளார். இதனால் பின்னணி இசைக்கு ஜி.வி.பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்த 'புஷ்பா 2' படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். அந்த படத்திற்கும் பின்னணி இசையை தமன் வசம் ஒப்படைத்துள்ளது படக்குழு. இதனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ரவி - தேவி ஸ்ரீ பிரசாத் இடையே புகைச்சல் இருந்து வந்ததாகவும், அதன் வெளிப்பாடாகவே குட் பேட் அக்லி படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத்
இந்த நிலையில் சென்னையில் நேற்று (நவ.,25) நடைபெற்ற 'புஷ்பா 2' புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், “ரவி சார், நான் சரியான நேரத்தில் பாடல்களைத் தரவில்லை, பின்னணி இசையைத் தரவில்லை என என் மீது குற்றம் சுமத்தினீர்கள். நீங்கள் என் மீது அன்பு செலுத்துபவர். ஆனால், என் மீதான அன்பை விட உங்கள் குற்றச்சாட்டுக்கள்தான் அதிகமாக உள்ளது. மேடை மீது இவற்றை டிஸ்கஸ் செய்யத் தேவையில்லை. நான் மேடையில் பேசினால் அது என்னைத்தான் தாக்கும். இருந்தாலும் நான் ஓபனாக இருக்க விரும்புகிறேன்,'' என மனம் விட்டு பேசியிருந்தார்.
குட் பேட் அக்லி
பின்னர், தயாரிப்பாளர் ரவியிடம் 'குட் பேட் அக்லி' குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ''இறுதிகட்டப் படப்பிடிப்பை நெருங்கிவிட்டோம். இன்னும் 7 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியை விரைவில் தெரிவிப்போம். முன்பாக பொங்கல் வெளியீடு என்று பலமுறை கூறி விட்டோம். 'குட் பேட் அக்லி' படம் அற்புதமாக வந்திருக்கிறது. தமிழில் எங்களது முதல் தயாரிப்பு கண்டிப்பாக பெரும் வெற்றிப் படமாக இருக்கும் என நம்புகிறேன்'' எனத் தெரிவித்தார்.




