Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தாவின் அபத்தமான, பயனற்ற செலவு என்ன தெரியுமா?

25 நவ, 2024 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Samantha-Seemingly-Takes-Dig-At-Naga-Chaitanya,-Says-Spent-'Ridiculous-Amount'-On-His-'Useless'-Gifts


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்துக் கொண்டிருப்பவர் சமந்தா. தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தார். நாக சைதன்யாவுக்கும், 'பொன்னியின் செல்வன்' பட நடிகை சோபிதா துலிபலாவுக்கும் இடையே அடுத்த மாதம் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

இதனிடையே, சமந்தா நடித்து சமீபத்தில் வெளிவந்த வெப் சீரிஸான 'சிட்டாடல் - ஹனி பன்னி' புரமோஷனுக்காக ஒரு 'ரேப்பிட் பயர்' கேள்வி பதில் வீடியோ ஒன்றை அமேசான் வெளியிட்டது. அதில் நடிகர் வருண் தவான் சமந்தாவிடம், “உங்களது அபத்தமான செலவு, முற்றிலும் பயனற்றது எது," எனக் கேட்டார். அதற்கு சமந்தா, “எனது முன்னாள் கணவருக்கான விலையுயர்ந்த பரிசுகள்' என பதிலளித்தார். 'எவ்வளவு தொகை' என வருண் மீண்டும் கேட்க, 'நிறையவே' என்றார் சமந்தா. உடனே அடுத்த கேள்விக்குப் போவோம் எனக் கூறிவிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நாக சைதன்யா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதற்காகவே சமந்தா இப்படி ஒரு பதிலளித்திருப்பார் என ரசிகர்கள் அதற்கு கமெண்ட் செய்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் - காதலை உறுதி செய்த ராஷ்மிகாஎல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் - ... பிளாஷ்பேக்: வெள்ளி விழா கொண்டாடிய புராண புனைவு கதை பிளாஷ்பேக்: வெள்ளி விழா கொண்டாடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)