மலையாள நடிகை மமிதா பைஜூ மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் 'பிரேமலு' படத்தின் மூலம் தான் மொழியை கடந்து பிரபலமானார். தமிழில் 'ரெபல்' எனும் படத்தின் மூலம் அறிமுகமானார் மமிதா பைஜூ. தற்போது தமிழில் விஜய்யின் 69வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மமிதா பைஜூ தெலுங்கில் 'டியர் கிருஷ்ணா' எனும் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். தினேஷ் பாபு இயக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ உடன் இணைந்து அக்ஷய் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கின்றனர்.