நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிக்கும் அவரது கடைசி படமான 69வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. அதே சமயம் படத்திற்கான வியாபார பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாகத் தகவல். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் அமெரிக்க வினியோக உரிமை விலை 25 கோடி ரூபாய் என அமெரிக்கா வினியோகஸ்தர் ஒருவர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் தனது தியேட்டரில் படம் வரும் போது பார்த்துக் கொள்கிறேன். அவ்வளவு தொகையைக் கேட்டதும் தனக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. அடுத்த வாரம் யாரோ ஒருவர் இந்த வியாபாரத்தை முடித்துக் கொள்வார். வாழ்த்துகள்,” என்றும் பதிவிட்டுள்ளார்.
அவ்வளவு தொகை கொடுத்து படத்தை வாங்கினால் சுமார் 60 கோடி வசூலை மொத்தமாக வசூலித்தால் மட்டுமே படத்தின் உரிமை விலையை மீட்க முடியும் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு அந்த வினியோகஸ்தர் பதிலளித்துள்ளார்.
விஜய் 69 படத்தின் வியாபார விலை, விஜய்யின் முந்தைய படமான 'தி கோட்' படத்தை விடவும் அதிகமாகக் கேட்கப்படுவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.