கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
2024ம் ஆண்டு தமிழ் சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும் என ஆண்டு துவக்கத்தில் திரையுலகத்தினராலும், ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டாப் நடிகர்களின் படங்களே எதிர்பாராத விதத்தில் வசூலில் ஏமாற்றி தோல்விப் படங்களாக அமைந்து அதிர்ச்சியைக் கொடுத்தது. அதே சமயம் எதிர்பார்க்கப்படாத சில சிறிய படங்கள் பெரிய வெற்றியையும், வசூலையும் குவித்து ஆச்சரியப்படுத்தியது.
இந்த 2024ம் ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்துள்ளது. கடந்த வருட வெளியீடுகளுடன் ஒப்பிடும் போது, அதே எண்ணிக்கையிலான படங்கள்தான் நவம்பர் மாத மத்தியிலும் வெளிவந்துள்ளன. ஆனால், கடந்த வருட முடிவில் வெளியான படங்களின் எண்ணிக்கை 240ஐக் கடந்தது. இந்த வருடம் முடிய இன்னும் ஆறு வாரங்களே உள்ள நிலையில் அதுபோல 40 படங்கள் வரை வெளியாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.
2024ம் ஆண்டிற்கான கண்ணோட்டத்தை இப்போது கூடவே சொல்லிவிடலாம். ஏனென்றால் வரவேண்டிய பெரும்பாலான முக்கிய படங்கள் வந்துவிட்டன. இன்னும் டிசம்பர் மாதம் வெளியாக வேண்டிய 'விடுதலை 2' படம் மட்டும்தான் ஓரளவிற்கு முக்கியமான ஒரு படம். மற்ற படங்கள் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தவில்லை. ஆனாலும், அவற்றிலும் சில படங்கள் தரமாக அமைந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
2024ல் எதிர்பார்த்து ஏமாந்தது, 2025ல் நடக்காது என்று நம்புவோமாக….