ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
‛இமைக்கா நொடிகள், அடங்கமறு, அரண்மனை 4' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தமிழ் தாண்டி தெலுங்கு, ஹிந்தியிலும் நடிக்கிறார். தற்போது ஹிந்தியில் ‛தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். நாளை(நவ., 15) இந்தப்படம் வெளியாகிறது. இதுதொடர்பான புரொமோஷனில் இவர் ஈடுபட்டார். அதன் ஒருபகுதியாக தன் வாழ்வில் வந்த காதல் தோல்வி பற்றியும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛பொதுவாகவே நான் உணர்ச்சிவசப்படுபவள். என் வாழ்விலும் காதல் வந்தது, ஆனால் அது தோல்வி அடைந்துவிட்டது. அந்த வேதனையில் மன அழுத்தத்திற்கு ஆளானேன். பின்னர் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வலுவானேன். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சினிமா உதவியால் அதிலிருந்து மீண்டு வந்தேன்'' என தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.