Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'புஷ்பா 2' பாடலுக்காக ஸ்ரீ லீலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

14 நவ, 2024 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Do-you-know-how-much-Sreeleela-got-paid-for-the-song-Pushpa-2


நடிகை ஸ்ரீ லீலா தற்போது டிரென்டிங் ஹீரோயின் ஆக வலம் வருகிறார் .இவரின் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள "புஷ்பா 2" படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரீ லீலா நடனமாடியுள்ளார்.

புஷ்பா முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா' என்கிற பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடினார். இதே போல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இடம்பெறுகிறது. இதில் ஸ்ரீ லீலா நடனமாடுவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த பாடலுக்காக ஸ்ரீ லீலா ரூ.2 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஊ சொல்றியா' பாடலுக்கு சமந்தா ரூ.5 கோடி வாங்கியது குறிப்பிடத்தக்கது. சமந்தாவை விட குறைவான சம்பளம் வாங்கினாலும், அவரை விட ஸ்ரீ லீலா நடனம் மூலம் அதிகம் கவர்ந்தவர். அதேநேரத்தில் சமந்தாவின் கவர்ச்சிக்காவும் அப்பாடல் பெரிய ஹிட்டானது. 'புஷ்பா 2' படத்தில் ஸ்ரீ லீலா ஆடும் பாடலும் அதேபோன்று கவர்ச்சியுடன் இருக்குமா என்பது படம் வெளியான பிறகே தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
என்னை நம்பி கடவுள் ஒரு குழந்தையை ஒப்படைத்திருக்கிறார் : மகன் பற்றி பிரியாராமன் கண்ணீர் பேட்டிஎன்னை நம்பி கடவுள் ஒரு குழந்தையை ... சினிமா எடிட்டர் உதய சங்கர் காலமானார் சினிமா எடிட்டர் உதய சங்கர் காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தமிழன் - கோவை,இந்தியா
14 நவ, 2024 - 04:11 Report Abuse
தமிழன் இதுல ஹிட் என்ன ஃபிளாப் என்ன?? காட்டினால் ரசிக்க வேண்டியதுதானே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)