ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
நடிகர் ரஞ்சித்தும், நடிகை பிரியா ராமனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இடையில் சில காலம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். ரஞ்சித் நடிகை ராகசுதாவை 2வது திருமணம் செய்தார். பின்னர் அவரை விட்டு பிரிந்தார்.
தற்போது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரஞ்சித் தனது மூத்த மகன் ஆதித்யா ஆடிசம் பாதித்த குழந்தை என்பதை கண்ணீருடன் தெரிவித்தார். இதுவரை வெளி உலகம் அறியாத இந்த விஷயம் தெரியவந்தபோது எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தனது மகன் ஆதித்யா குறித்து பிரியா ராமன் கூறியிருப்பதாவது:
ஆதித்யாவை நாங்கள் ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை. நான் ஆதித்யா அம்மா என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற மகனை வீட்டில் வளர்ப்பது என்பது சவாலான விஷயம். ஆதித்யாவுக்கு ஆட்டிசம் என்று சொன்னபோது, ‛நீ என்ன தவறு செய்தாய்? உனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைத்திருக்கிறது' என்று, ஆறுதல் சொல்வதாக நினைத்து என்னிடம் சிலர் சொல்வார்கள். நானும் வருத்தப்பட்டு அழுதிருக்கிறேன் என்றாலும், இதுதான் என்பதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகு பல விஷயங்கள் புரிந்தது.
கடவுள் என்னை நம்பி, என்னிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்திருக்கிறார். என் மீது கடவுளுக்கு அவ்வளவு நம்பிக்கை என்று தோன்றியது. ரஞ்சித்தின் நிறைய குணங்கள் ஆதித்யாவிடம் இருக்கிறது. மிகவும் பாசமான, அன்பான மகன். நாங்கள் சோகமாக இருந்தால், உடனே வந்து கட்டிப்பிடிப்பான். நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வைக் கொடுப்பான். அவன் எங்களின் அன்புக் குழந்தை. அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படுவோம்.
அவனது பயணத்தில்தான் எங்களது பயணமும் இணைந்திருக்கிறது. நான் எங்கே சென்றாலும் ஆதித்யாவையும் அழைத்துச் செல்வேன். மியூசிக், ஸ்போர்ட்ஸ் எல்லாம் அவனுக்கு மிகவும் பிடிக்கும். தனக்குப் பிடித்ததை சந்தோஷமாக செய்து கொண்டிருக்கிறான். எங்கள் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.