ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களில் இருந்து திறந்த வெளிக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா என்பார்கள். ஆனால் அப்படியான முயற்சி 1930களிலேயே தொடங்கி விட்டது. ஹாலிவுட் மற்றும் கொரியன் படங்களின் தாக்கத்தில் இப்போதும் படங்கள் வெளிவருது உண்டு. அதே போல அந்த காலத்திலும் இருந்திருக்கிறது. அப்போது ஹாலிவுட் படமான 'டார்ஜானை' தழுவி தமிழில் 1938ல் 'வனராஜ கார்ஸன்', ஹிந்தியில் 'ஜங்கிள் கிங்' என்ற பெயரில் ஒரு படம் உருவானது.
இந்த படத்தை ஹோமி வாடியா என்ற ஆங்கில இயக்குனர் இயக்கினார், ஜான் கேவாஸ் என்ற சண்டை இயக்குனர் நாயகனாக அதாவது டார்ஜானாக நடித்தார். அவருக்கு ஜோடியாக கே.ஆர்.செல்லம் என்ற நடிகை நடித்தார். படத்திற்கு ஒளிப்பதிவு செய்தது ஆங்கில ஒளிப்பதிவாளர்களான ருஸ்டம் மெய்பரும், பாலி மிஸ்ட்ரியும், யானை அனந்த ராம அய்யரும், வைத்தியநாத அய்யரும் இசை அமைத்திருந்தார்கள். இயக்னர் வாடியாவே மெட்ராஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்டுடன் இணைந்து தயாரித்தார்.
இந்த படத்தில் நாயகி கே.ஆர்.செல்லம், நீச்சல் உடையில் நடித்ததற்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. குடும்ப சுமையாலும், இயக்குனரின் வற்புறுத்தலாலும் அப்படி நடித்ததாக கே.ஆர்.செல்லம் விளக்கம் கொடுத்து மன்னிப்பும் கேட்டார். ஆனால் இந்த படம் செல்லத்திற்கு பெரிய எதிர்காலத்தை உருவாக்கியது. லக்ஸ் சோப் விளம்பரத்தில் அதே மாதிரி பிகினி உடை அணிந்து நடித்தார்.