ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
டிவி சீரியல்களில் நடித்து வந்த கவின் 'சத்ரியன்' படத்தில் ஒரு முக்கியமான துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்கடுத்து 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், அந்தப் படம் ஓடவில்லை. பிறகு ஓடிடியில் வெளிவந்த 'லிப்ட்' படம் மூலமும், கடந்த வருடம் வெளிவந்த 'டாடா' படம் மூலமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.
இந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'ஸ்டார்' படம் சுமாராக ஓடியதாக சொல்லப்பட்டது. தீபாவளிக்கு வெளிவந்த 'பிளடி பெக்கர்' படம் எதிர்பார்ப்பை ஏமாற்றி தோல்விப் படமாக அமைந்தது. அந்தப் படத்துடன் 'கிஸ், மாஸ்க், நயன்தாராவுடன் ஒரு படம்' என அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார் கவின். இவற்றில் 'கிஸ்' படத்திற்கு அவர் சம்பளமாக ஓரிரு கோடிகள்தான் வாங்கினார் என்று சொல்லப்பட்டது. ஆனால், மற்ற படங்களுக்கு 5 முதல் 7 கோடி வரை சம்பளம் என்று தகவல்.
'கிஸ்' படத்தில் நடிக்க ஆரம்பித்தவர், அதைவிட அதிக சம்பளம் கொடுக்கப்பட்ட மற்ற படங்களில் நடிக்கப் போய்விட்டார். தனது புதிய சம்பளத்தைக் கொடுத்தால் மீண்டும் 'கிஸ்' படத்தில் நடிப்பதாகச் சொன்னார் என கோலிவுட் தகவல். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இப்போது 'பிளடி பெக்கர்' படம் தோல்வியடைந்த நிலையில் 'கிஸ்' படக்குழுவுடன் அமர்ந்து சமரசம் பேசி மீண்டும் பழைய சம்பளத்திற்கே நடித்துத் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் கவின். இதனால், படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாக உள்ளது என்பது லேட்டஸ்ட் செய்தி.
'கிஸ்' படத்தை நடன இயக்குனர் சதீஷ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். 'திருச்சிற்றம்பலம்' படத்திற்காக சிறந்த நடன இயக்குனர் விருதைப் பெற்றவர் சதீஷ். 'அயோத்தி' படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த வருடம் 2023 மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.