வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் சென்னையில் அவரது இல்லத்தில் தூக்கத்திலேயே காலமானார். இந்திய வான் படையில் பணியாற்றி, கலை துறையில் உள்ள ஈர்ப்பால் நாடகத்தில் பயணித்து, பின்னர் கே பாலசந்தர் இயக்கிய ‛பட்டினப்பிரவேசம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஹீரோ, குணச்சித்ரம், நகைச்சுவை என அசத்தி 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சென்னை, ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் இயக்குனர்கள் சந்தான பாரதி, லிங்குசாமி, வெற்றிமாறன், நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, ஸ்ரீமன், செந்தில், ராதாரவி, ரமேஷ் கண்ணா, மன்சூர் அலிகான், சித்ரா லட்சுமணன், மணிகண்டன், சார்லி, சத்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், தேவயானி உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தவெக தலைவரும், நடிகருமான விஜய், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்களது வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று(நவ., 11) காலை அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகள் செய்தனர். வான்படை சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னை, நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
ஒரு நீண்ட நெடிய வெள்ளித்திரைப் பயணத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த இந்த கலைஞன் இன்று நம்மை விட்டு சென்றாலும் அவர் நடித்த படங்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்வார்.