வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த படம் 'அமரன்'. அப்படத்துடன் ஜெயம் ரவி நடித்த 'பிரதர்', கவின் நடித்த 'பிளடி பெக்கர்' ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆனால், 'அமரன்' படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதனால், படத்திற்கான ஓபனிங் மிகச் சிறப்பாக இருந்தது. தொடர்ந்து கடந்த பத்து நாட்களாக படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விடவும் நன்றாக வசூலித்து 200 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இதனிடையே, சூர்யா நடித்துள்ள பிரம்மாண்டப் படமான 'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. ஆனால், தற்போது வரை தமிழகத்தில் படம் வெளியாக இன்னும் மூன்றே நாட்கள் உள்ள நிலையில் இன்னும் ஆன்லைன் முன்பதிவு பெரும்பாலான தியேட்டர்களில் ஆரம்பமாகாமல் உள்ளது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
'கங்குவா' படத்திற்கான தியேட்டர் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக போடப்படவில்லையாம். பேச்சுவார்த்தை அளவிலேயே போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள். வழக்கமாகக் கேட்கும் சதவீதத்தை விட தயாரிப்பு நிறுவனம் அதிகமாகக் கேட்பதும் ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். அதோடு, 'அமரன்' படம் நன்றாக போய்க் கொண்டிருப்பதால் அப்படத்தைத் தூக்கிவிட்டு 'கங்கவா' படத்தைப் போட பல தியேட்டர்காரர்கள் தயங்குகிறார்களாம்.
இந்த சிக்கலை 'கங்குவா' தயாரிப்பு நிறுவனம் எப்படி ஓரிரு நாளில் தீர்க்கப் போகிறது என திரையுலகில் காத்திருக்கிறார்கள். கடந்த வாரம்தான் இப்படத்திற்கு தடை கேட்ட வழக்கை செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தி முடித்து வைத்தார்கள். இப்போது இந்த சிக்கல் வந்து நிற்கிறது. மேலும், அடுத்த நான்கைந்து நாட்களுக்கு தமிழகத்தில் கடும் மழை பெய்யும் என வானிலை ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள். அதுவும் 'கங்குவா' வசூலை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.