ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் 2021ல் வெளிவந்த படம் 'புஷ்பா'. அந்த முதல் பாகப் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. நேரடி தெலுங்குப் படம் என்றாலும் தமிழ், ஹிந்தி டப்பிங்கிலும் பாடல்கள் பெரிதும் ரசிக்கப்பட்டு ஹிட்டானது.
'புஷ்பா 2' படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக படத்திற்கான பின்னணி இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைக்கவில்லை. இசையமைப்பாளர்கள் தமன் மற்றும் அஜனீஷ் லோகநாத் ஆகியோர் அமைத்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியானது. படக்குழுவிலிருந்தோ, தேவி ஸ்ரீ பிரசாத் தரப்பிலிருந்தோ இது குறித்து எதுவுமே சொல்லாமல் இருக்கிறார்கள்.
இதனிடையே, நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பின்னணிப் பாடகர் கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்தார் இசையமைப்பாளர் தமன். அப்போது மேடையில் கார்த்திக்கிடம் பேசும் போது, 'புஷ்பா 2 எனக்காகக் காத்திருக்கிறது,” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
இதையடுத்து அப்படத்தின் பின்னணி இசையை தமன் அமைக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.