'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ்குமாருக்கு இந்த வருட தீபாவளி இசையமைப்பாளராக மகிழ்ச்சியான தீபாவளியாக அமைந்துவிட்டது. நடிக்க வந்த பின் இசையில் அவர் கவனம் செலுத்துவது குறைந்துவிட்டது என்று விமர்சனங்களும் வந்தது.
இருந்தாலும் அவ்வப்போது அவருக்கு சில சிறப்பான படங்கள் அமைந்து அவரது இசைத் திறமையை வெளிக்காட்ட உதவியது. “அசுரன், சூரரைப் போற்று, தங்கலான்” ஆகிய வரிசையில் தற்போது 'அமரன்' படமும், தெலுங்கில் 'லக்கி பாஸ்கர்' படமும் சேர்ந்துள்ளது. இந்த தீபாவளிக்கு வெளிவந்த இந்த இரண்டு படங்களுமே அவருடைய இசையைப் பற்றிப் பாராட்ட வைத்துவிட்டன.
“அமரன், லக்கி பாஸ்கர்”.... இரண்டு மாநிலங்கள்… இரண்டு பிளாக்பஸ்டர்ஸ்... எனது இசைக்கு நீங்கள் தந்த அன்பான வரவேற்புக்கு நன்றி,” என நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டவர் இன்று, “என் மீது நீங்கள் பொழியும் அன்புக்கு நன்றி… இன்னும் நிறைய மைல்கள் போக வேண்டும்… தூங்குவதற்கு முன்பாக…,” என பதிவிட்டுள்ளார்.
இந்த இரண்டு படங்களின் இசை வேலைகளில் தூக்கத்தை மறந்து மூழ்கி இப்போதுதான் தூங்கப் போகிறார் போலிருக்கிறது.