ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2வது படமாக 'பென்ஸ்' என்கிற பெயரில் உருவாகிறது என அறிவித்தனர். இவருடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் நிறுவனங்களும் இப்படத்தை தயாரிக்கின்றனர். லோகேஷ் கதையில் உருவாகும் இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கின்றார். தற்போது இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
நேற்று ராகவா லாரன்ஸின் பிறந்த நாளையொட்டி பென்ஸ் படம் 'லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில்' (எல்.சி.யூ) இணைகிறது என இதற்காக ஒரு அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ் தோன்றினார். கைதி, விக்ரம், லியோ படங்களை தொடர்ந்து பென்ஸ் படமும் எல்சியூ.,வில் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புல்லட் கிளிம்ஸ்
டைரி பட இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் முதல் முறையாக ஹீரோவாக ராகவா லாரன்ஸ்-ன் தம்பி எல்வின் லாரன்ஸ் அறிமுகமாகிறார். இதில் வைஷாலி ராஜ், சுனில்,சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் அவரது தம்பிக்காக சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார் ராகவா லாரன்ஸ். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோவை ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளனர்.
![]() |