இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. விஜய் அரசியல் வருவதாக அறிவித்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், விஜயின் அரசியல் வருகைக்கு திரை நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் பக்கத்தில், ‛‛இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை ரெஜினா, ‛‛விஜய் வெற்றிகரமான நடிகர். வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் வருவார்'' என்று வாழ்த்தியுள்ளார். நடிகர் பிரபு கூறுகையில், ‛‛நடிகர் விஜய்க்கு நான் முழு ஆதரவு. எனது தந்தை ஆசியும் எனது ஆதரவும் அவருக்கு உண்டு. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசிர்வதிக்கிறேன்'' என்றார்.
நடிகர் ஜெயம் ரவி, ‛‛நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள். நம்பமுடியாத மைல்கல்லில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு. சினிமாவில் நீங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்த புதிய பயணம் சிறப்பான வெற்றியடைய வாழ்த்துக்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.