விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் படம் 'குட் பேட் அக்லி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் திரிஷா,பிரசன்னா,அர்ஜுன் தாஸ்,பிரபு, யோகி பாபு ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்திலிருந்து அஜித் மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ள ஒரு போட்டோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இருவரும் புதிய தோற்றத்தில் உள்ளனர். குட் பேட் அக்லி படத்திலிருந்து சமீபகாலமாக வெளிவரும் ஒவ்வொரு போட்டோவும் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.