அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
மித்ரன் ஜவகர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'திருச்சிற்றம்பலம்'. அப்படத்தின் பாடல்களில் அதிரடிப் பாடலாக இடம் பெற்ற பாடல் 'தாய் கிழவி'. அப்பாடல் யு டியூப் தளத்தில் தற்போது 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தனுஷ் எழுதி பாடிய பாடல் அது.
அனிருத்தின் இசையில் வெளிவந்த பாடல்களில் பல பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன. அவற்றில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடலாக அவரது இசையில் முதலில் வெளிவந்த படமான '3' படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் இதுவரையில் 479 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குத்து' பாடல் 648 மில்லியன் பாடல்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதன் லிரிக் வீடியோ பாடல் 526 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி' பாடலும் 516 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 'மாரி' படத்தின் 'டானு டானு' பாடல் 256 மில்லியன் பார்வைகளையும், 'ஜெயிலர்' படத்தின் 'காவாலாய்ய' பாடல் 246 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.
தற்போது 'தாய் கிழவி' பாடலும் 200 மில்லியன் கிளப்பில் சேர்ந்துள்ளது. அனிருத்தின் 7வது 200 மில்லியன் பாடல் இது. அதிகமான 200 மில்லியன் பாடல்களைக் கொடுத்துள்ளதும் அனிருத் தான்.