வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
80களில் தொடங்கி இன்றுவரை தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் சுஹாசினி. அவர் அறிமுகமான 'நெஞ்சத்தை கிள்ளாதே' படம் வெள்ளி விழா கொண்டாடி இன்று வரைக்கும் கிளாசிக்கல் மூவியாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் சுஹாசினி நடிக்க மறுத்தார் என்பதும் உண்மை.
இயக்குனர் மகேந்திரன் 'ஜானி' படத்தை இயக்கி கொண்டிருந்தபோது ஒரு வேலையாக மும்பை சென்றார். அங்கு அவர் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது ஒரு இளம் பனி கொட்டும் அதிகாலையில் பேண்ட் டிசர்ட் அணிந்து ஜாக்கிங் செய்து கொண்டிருந்தார். இப்படி சுதந்திரமாக ஓடும் பெண் வாழ்க்கையில் எத்தனை பிரச்னைகள் வருமோ என்று அவர் மனசுக்குள் எழுந்த கேள்விதான் 'நெஞ்சத்தை கிள்ளாதே' படமாக உருவானது.
இந்த படத்தில் நடிக்க நடிகையின் எந்த சாயலும் இல்லாத அதே நேரத்தில் துணிச்சலான, சுறுசுறுப்பான பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தார். கமல்ஹாசன் குடும்பதிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவருக்கு சுஹாசினியை சிறுமியாக இருப்பதில் இருந்து தெரியும். அவரையே நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அப்போது அவர் பெரிய ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று அசோக்குமாரிடம் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். மகேந்திரனின் 'ஜானி' படத்திலும் பணியாற்றினார். அவரை அழைத்து நடிக்க கேட்டபோது “போங்க அங்கிள் நான் பெரிய கேமரா உமனாக வேண்டும். இந்த நடிப்பெல்லாம் சரிப்பட்டு வராது” என்று உறுதியாக மறுத்து விட்டார்.
முயற்சியை தளரவிடாத மகேந்திரன் சுஹாசினியின் தந்தையான சாருஹாசன், மகேந்திரனின் குடும்ப நண்பர் என்பதால் அவரின் மூலம் பேசினார். மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின் 'ஓகே.. இந்த ஒரேயொரு படம் மட்டுமே நடிப்பேன். இடையில் பிடிக்கவில்லையென்றால் விலகி விடுவேன்' என்கிற நிபந்தனையுடன் நடிக்க வந்த சுஹாசினி பிற்காலத்தில் தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையானார், படமும் இயக்கினார்.