ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

சென்னையில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால், அதையடுத்து மீடியாக்களை சந்தித்தார். அப்போது அவரிடத்தில் வருகிற 27ம் தேதி விக்கிரவாண்டியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதில் கலந்து கொள்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு விஷால் பதிலளிக்கையில், ''விஜய் அழைப்பு விடுத்தால் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வேன். அதேசமயம் அவர் அழைக்கவில்லை என்றாலும் அவரது கட்சி மாநாட்டில் நான் கலந்து கொள்வேன். ஒரு வாக்காளனாக சென்று அந்த மாநாட்டை பார்ப்பேன். அவர் புதிய அரசியல்வாதி என்பதால் அவரது கட்சியின் முதல் மாநாடு எப்படி நடக்கிறது, இந்த மாநாட்டில் தனது கட்சியின் கொள்கை குறித்து விஜய் என்னென்ன சொல்ல போகிறார் என்பதை ஒரு வாக்காளராக அங்கு சென்று கேட்டறிவேன்,'' என்று கூறிய விஷால், ''சமூக சேவை செய்து வருவதால் நானும் அரசியல்வாதிதான். விஜய் கட்சியில் இணைவது குறித்து இன்னும் நான் முடிவு எடுக்கவில்லை. அது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடுக்கு பிறகு முடிவெடுப்பேன்,'' என்றும் தெரிவித்திருக்கிறார் விஷால்.