லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ரஜினி. அதையடுத்து ஓய்வு எடுத்து வந்தவர், இன்று முதல் மீண்டும் சென்னையில் நடைபெற்று வரும் கூலி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த படப்பிடிப்பில் ரஜினி நடிக்கும் ஆக்சன் காட்சிகள் படமாகப்பட உள்ளது.