ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிப்பில் 2014ம் ஆண்டில் வெளிவந்த படம் 'அஞ்சான்'. அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி 'கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்தப் படத்துல இறக்கி இருக்கேன்' என ஓவராகப் பேட்டி கொடுத்த காரணத்தால் அதிகமாக 'டிரோல்' செய்யப்பட்டார். படமும் எதிர்பார்த்தபடி இல்லாததால் படுதோல்வியை அடைந்தது. பலராலும் கிண்டலடிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
இப்போது இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் ஆர்ஜே பாலாஜி, அப்போது எப்எம் ரேடியோ ஒன்றில் ஆர்ஜே-வாக வேலை செய்து வந்தார். அந்தப் படத்தைப் பற்றி அதிகமாகக் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களிலும் விமர்சித்தார். அது மட்டுமல்ல அவர் காமெடி நடிகராக நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தில் ஒரு காட்சியில் ''அஞ்சான்' படத்துக்கு அஞ்சி டிக்கெட் இருக்கு வரியா, 'முகமூடி' படத்துக்கு மூணு டிக்கெட் இருக்கு வரியா”, எனவும் வசனம் பேசி நடித்தார்.
அன்று சூர்யா படத்தைக் கிண்டலடித்தவர், இன்று சூர்யாவின் 45வது படத்தை இயக்க உள்ளார். பாலாஜி தன்னைப் பற்றி கிண்டலடித்ததை பொருட்படுத்தாமல் அவருக்கு தன் படத்தை இயக்கவும் வாய்ப்பு கொடுத்த சூர்யாவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.
'அஞ்சான்' போல ரசிகர்கள் அஞ்சி ஓடாத ஒரு அருமையான படத்தைக் கொடுப்பாரா ஆர்ஜே பாலாஜி ?.