ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய 44வது படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருப்பதாக செய்தி வெளியானது.
இதற்காக அவர் லொகேஷன் பார்த்துவரும் புகைப்படத்தையும் ஆர்ஜே பாலாஜி பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், ஆர்ஜே பாலாஜி - சூர்யா படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இப்படத்திற்கான பூஜை இன்று (அக்.,14) நடைபெற்றது. படப்பிடிப்பு நவம்பரில் துவங்குகிறது.
ஆர்ஜே பாலாஜி ஏற்கனவே, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இப்படத்தை அடுத்தாண்டு இரண்டாம் பாதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.