லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில் நடிப்பில் அக்., 10ம் தேதி திரைக்கு வந்த படம் வேட்டையன். அனிருத் இசையமைத்த இந்த படம் முதல்நாளில் இந்திய அளவில் 31 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதையடுத்து இரண்டாவது நாளில் 25 கோடியும், மூன்றாவது நாளில் 27 கோடியும், நான்காவது நாளில் 22 கோடியும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்திய அளவில் 4 நாட்களில் 104 கோடி ரூபாய் வசூலித்துள்ள வேட்டையன் படம், உலக அளவில் நான்கு நாட்களில் 212 கோடி வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் இந்தபடம் உலகளவில் 4 நாட்களில் ரூ.240 கோடி வசூலித்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் பெரும்பாலான திரையரங்கங்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த வேட்டையன் இதற்கு முன்பு ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் பட வசூலை நெருங்கிவிடும் என்கிற கருத்துக்களும் வெளியாகி வருகிறது.