50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால், சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் : பிறந்தநாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் |
சோசியல் மீடியாக்களின் தாக்கம் அதிகமான பிறகு நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றன. இதில் சில டெக்னாலஜி உதவியுடன் சில விஷமிகள் நடிகைகள் குறித்து டீப் பேக் வீடியோ வெளியிட்டும் அவர்களது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்..
பொதுவாக இது போன்ற தங்களுடைய அந்தரங்க வீடியோக்கள் வெளியாகும்போது அது நிஜமோ அல்லது டீப் பேக் செய்யப்பட்டதோ பெரும்பாலும் நடிகைகள் பலரும் அது தங்களுடையது இல்லை என்று தான் மறுப்பார்கள். இந்த நிலையில் தற்போது நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ என சொல்லப்பட்டு ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர வைத்துள்ளது என்றால் அந்த வீடியோ குறித்து நடிகை ஓவியா வெளியிட்டுள்ள பதில் இன்னும் அதிகம் அதிர வைப்பதாக உள்ளது.
அந்த வீடியோ உண்மையா பொய்யா என்கிற எந்த கருத்தையும் சொல்லாத ஓவியா, சோஷியல் மீடியாவில் ரசிகர் ஒருவர் இந்த வீடியோ வெளியானது குறித்து கேட்டபோது, “பார்த்து ரசியுங்கள்” என்று பதட்டமில்லாமல் பதில் கூறியுள்ளார். அதேபோல இன்னொருவர் ஓவியாவை சீண்டும் விதமாக கொஞ்சம் நீளமான வீடியோவாக இருந்திருக்கலாமே என்று கேட்க, “அடுத்த தடவை வரும் ப்ரோ” என தில்லாக பதில் கூறி கேள்வி கேட்டவரின் வாயையும் அடைத்துள்ளார்.
ஓவியாவின் இந்த பதிலும் அணுகுமுறையும் இனி இந்த செய்தி பற்றி வெளியே யாரும் பரபரப்பாக பேச முடியாத அளவிற்கு செய்துவிட்டது என்றே சொல்லலாம்.