பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் சிரஞ்சீவி. இடையில் சிறிது காலம் அரசியல் பக்கம் போய்விட்டு, பின் மீண்டும் சினிமா பக்கமே திரும்பியவர். 'கைதி நம்பர் 150' படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தவர் அடுத்து 'சை ரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா, காட்பாதர், வால்டல் வீரய்யா, போலா சங்கர்' ஆகிய படங்களில் நடித்தார்.
அந்தப் படங்களின் டீசர்களுக்குக் கிடைக்காத வரவேற்பு நேற்று காலை வெளியான 'விஷ்வம்பரா' படத்தின் டீசருக்குக் கிடைத்துள்ளது. 24 மணி நேரத்தில் அந்த டீசர் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
சிரஞ்சீவி நடித்து இதற்கு முன்பு வெளியான 'போலா சங்கர்' படத்தின் டீசருக்கு 24 மணி நேரத்தில் 12 மில்லியன் பார்வைகள் மட்டுமே கிடைத்தது. அந்த சாதனையை தற்போது 'விஷ்வம்பரா' டீசர் முறியடித்துள்ளது.
மேலும், தெலுங்குத் திரையுலகத்தில் வெளியான 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டீசராக 4வது இடத்தைப் பிடித்துள்ளது. 'ராதேஷ்யாம், சர்காருவாரி பாட்டா, புஷ்பா' ஆகிய படங்களின் டீசர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.