ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் ரஜினி நடிப்பில் உருவான படம் ‛வேட்டையன்'. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்க, அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. போலீஸ் தொடர்பான ஆக் ஷன் கதையில் அதிரடி படமாக உருவாகி உள்ளது.
இந்தப்படம் இன்று(அக்., 10) உலகம் முழுக்க வெளியானது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் காட்சிகள் துவங்கின. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் ஆட்டம், பாட்டு என கொண்டாடினர். அதேசமயம் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் வேட்டையன் படம் அதிகாலையிலேயே வெளியானது. காலை 4 மணிக்கே காட்சிகள் துவங்கின. அங்கேயும் ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.
வெளிமாநிலங்களில் வந்த ரசிகர்கள் கருத்துப்படி படம் நன்றாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ரஜினிக்கு நிச்சயம் கம்பேக் படம் என்றும், படம் அருமையாக இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
படம் பார்த்த பிரபலங்கள்
ரஜினியின் வேட்டையன் படத்தின் முதல் காட்சியை நடிகர்கள் விஜய், தனுஷ், இயக்குனர்கள் வெங்கட்பிரபு, ஐஸ்வர்யா, சவுந்தர்யா, இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்தனர்.