கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
‛கேப்டன்' என ரசிகர்கள், திரையுலகினர் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் மறைந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. ஆனாலும் இப்போதும் சோசியல் மீடியாக்களில் அவரது பாடல்கள், அவரது பேச்சுக்கள் குறித்த ரீல்ஸ் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி அவரது புகழை பறைசாற்றி வருகின்றன. அதுமட்டுமல்ல சமீபத்தில் கிராமத்து கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான லப்பர் பந்து படத்தில் நாயகன் அட்டகத்தி தினேஷ் கிரிக்கெட் கிரவுண்டில் இறங்கும் போதெல்லாம் விஜயகாந்த் ரசிகரான அவருக்கு நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்கிற பாடல் ஒலிக்கும் விதமாக இடம்பெற்று இருந்தது.
இது தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களை ரொம்பவே உற்சாகப்படுத்தியது. குறிப்பாக விஜயகாந்த் ரசிகர்கள் இதுதான் விஜயகாந்த்தை பெருமைப்படுத்தும் விதமாக வெளியான படம் என்று பாராட்டினார்கள். இந்த பாடல் பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1989ல் வெளியான பொன்மனச் செல்வன் என்கிற படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் பீட்டர் செல்வகுமார் விஜயகாந்த் உடன் நெருங்கி பழகியவர் என்பதால் எம்ஜிஆர் போலவே பல விஷயங்களில் அவருடைய குணாதிசயங்களை அருகில் இருந்து பார்த்தவர் என்பதால் எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல் என்கிற பட்டம் போல விஜயகாந்த்துக்கு பொன்மனச் செல்வன் என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கலாம் என அவரே வைத்துள்ளார்.
இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட படத்தின் இயக்குனர் வாசு, “பழைய பாடல்களுக்கு எப்போதுமே மவுசு இருக்கிறது. அதிலும் இப்போது அதை சரியான ஒரு சிச்சுவேஷனில் பொருத்தும் போது அது இன்னும் கூடுதல் மதிப்பை பெறுகிறது. மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு என்கின்ற பாடல் எந்த அளவிற்கு அந்தப் படத்தின் சிச்சுவேஷனுடன் இணைந்து ரசிகர்களை வசியப்படுத்தியதோ அதேபோல தற்போது லப்பர் பந்து படத்திலும் அப்படி ஒரு மேஜிக் நடந்திருக்கிறது.
விஜயகாந்த்தை பொருத்தவரை படப்பிடிப்பு தளத்தில் அவர் செம ஜாலியான கலாட்டாக்கள் செய்யக்கூடியவர். ரொம்பவும் நகைச்சுவையாக பேசுவார். இந்த படத்தில் பணியாற்றிய என்னுடைய உதவி இயக்குனர் ஒருவர் கல்லூரி பேராசிரியர். ஆனால் அதை எல்லாம் மறைத்துக் கொண்டு என்னிடம் உதவியாளராக பணியாற்றினார். ஒருநாள் படப்பிடிப்பிற்காக யானை ஒன்று தேவைப்பட்டபோது அதை கேரளாவில் இருந்து அவர் ஏற்பாடு செய்துள்ளதாக கூறி அந்த தகவலை முழுவதும் ஆங்கிலத்தில் என்னிடம் கூறினார்.
அப்போது அருகில் இருந்து அதைக் கேட்டுகொண்டிருந்த விஜயகாந்த் இப்படி உதவி இயக்குனர் ஒருவர் நீளமாக ஆங்கிலத்தில் பேசுவதை கேட்டு ஜெர்க் ஆகி பிறகு இரண்டு அடி பின்னால் சென்று தன் அருகில் இருந்தவர்களிடம் டேய் இது இங்கிலீஷ் குரூப்புடா என்று ஜாலியாக கூறினார். அப்போது அவரிடம் இவர்கள் நம் தமிழ் குரூப் தான்.. பேராசிரியர் என்பதால் அப்படி பேசுகிறார். நீங்கள் இரண்டடி பின்னால் போக வேண்டாம்.. இன்னும் இரண்டடி முன்னால் வாருங்கள் என்று நானும் ஜாலியாக கூறினேன். அந்த அளவிற்கு வெள்ளந்தியான மனிதர் விஜயகாந்த்” என்று கூறியுள்ளார்.