பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | நடிகர் ஆர்யா உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா | காந்தாரா 2 படப்பிடிப்பில் படகு விபத்து நடந்ததா? : தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் |
ஞானவேல் இயக்கத்தின் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் பத்தாம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது. அனிருத் இசையமைத்திற்கும் இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாபச்சன், பஹத் பாஸில், ராணா, மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏற்கனவே நடைபெற்ற நிலையில் இன்று வேட்டையன் டிரைலர் வெளியாகிறது. ரஜினி படங்களுக்கு எப்போதுமே ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட போன்ற பல வெளிநாடுகளில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது பல நாடுகளில் டிக்கெட் முன்பதிவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரை ரஜினி படம் வெளியாகாத தென் கொரியா நாட்டில் வேட்டையன் படம் வெளியாக உள்ளது. அந்த வகையில் தென் கொரியாவில் வெளியாகும் ரஜினியின் முதல் படம் மட்டுமின்றி முதல் தமிழ் படமும் இந்த வேட்டையன் தான். அதோடு இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் நிலையில் தென் கொரியாவில் அக்டோபர் 13ம் தேதி வெளியாகிறது.