‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'மெய்யழகன்'. இப்படம் 2 மணி நேரம் 57 நிமிடம் ஓடும் படமாக இருந்தது. படத்தின் நீளம் மிகவும் அதிகம் என விமர்சகர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர்.
படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் படத்தின் மையக் கருவுக்கு சம்பந்தமில்லாமல் படத்தின் தடத்தை மாற்றுகிறது என பலரும் கூறியிருந்தார்கள். ஆனாலும், இயக்குனர் பிரேம்குமார் நீளத்தைக் குறைக்கவும், காட்சிகளை வெட்டவும் மாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது படத்தில் 18 நிமிடங்கள் 42 நொடிகள் காட்சிகள் நீக்கப்பட்டு 2 மணி நேரம் 38 நிமிடங்கள் மட்டுமே ஓடும் விதத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என பிரேம்குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, ராஜசேகர், நாயகன் கார்த்தி, வினியோகஸ்தர் சக்திவேல் ஆகியோர் இன்று வரை தன்னை அரவணைத்து, எல்லா சூழலிலும் பக்கபலமாக துணை நிற்கிறார்கள். இப்போதும் இந்த நேரக் குறைப்பு செய்யும், என் முடிவிற்கு உடன் நிற்கிறார்கள், என அவரே குறைத்தது போல அறிக்கையில் குறிப்பிட்டு சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார்.
படத்தில் இடம் பெற்ற 'ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட காட்சிகள், சோழர் காலத்திலிருந்து கார்த்தி கதை சொல்லும் காட்சிகள், அரவிந்த்சாமி கோவிலுக்குச் செல்லும் காட்சிகள்” உள்ளிட்டவை அப்படியே தூக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இதை முதலிலேயே செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தியேட்டர்காரர்கள் சிலர் புலம்பியுதாகவும் கோலிவுட் தகவல்.