2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் |
வினோத் இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள அவரது கடைசி படமான விஜய் 69 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 4ம் தேதி படத்தின் பூஜையை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம். அடுத்த வருடமான 2025ல் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பது மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் நடிகையர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் தமிழகத்தில் பெரும் வசூலைக் குவித்தாலும் மற்ற மாநிலங்களில் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியவில்லை தனது கடைசி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் அளவில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாராம் விஜய்.
தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக வெளியாக உள்ள படம் என்பதால் படத்தில் அரசியல் கருத்துக்கள் நிறைய இருக்கும் எனத் தெரிகிறது. எனவே, படத்தில் விஜய்யின் தலையீடு அதிகம் இருக்கவும் வாய்ப்புள்ளது.